You are here
Home > Uncategorized > ஷூமாக்கர் இறந்து விட்டாரா? – இல்லை என்று கூறுகிறது மருத்துவமனை!

ஷூமாக்கர் இறந்து விட்டாரா? – இல்லை என்று கூறுகிறது மருத்துவமனை!

பிரான்ஸ்:பார்முலா ஒன் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கர் இறந்து விட்டதாக வந்த தகவலில் உண்மையில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பார்முலா ஒன் கார் பந்தய வீரரான மைக்கேல் ஷூமாக்கர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி பிரான்சில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது.

இதில் அவரது தலையில் பலத்த காயமடைந்ததால், தற்போது பிரான்சில் உள்ள கிரனோபல் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோமா நிலையில் இருக்கும் ஷூமாக்கருக்கு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானதால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து ஷூமாக்கர் இறக்கவில்லை என்றும், அவ்வாறு பரவிய தகவல் வெறும் வதந்தி என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Top