You are here
Home > Uncategorized > உலகம் > வெள்ளை மாளிகை தீபாவளி கொண்டாட்ட டிவிட்டால் சர்ச்சை!

வெள்ளை மாளிகை தீபாவளி கொண்டாட்ட டிவிட்டால் சர்ச்சை!

முன்னதாக கடந்த 15 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் நடைப்பெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு அங்கு நடைபெற்ற இடத்தேர்தல் நிகழ்வுகளால் தீபாவளி கொண்டாட்டம் நடைப்பெறவில்லை. இந்நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க ரூஸ்வெல்ட் அறையில் நேற்று தீபாவளி கொண்டாட்டம் நடைப்பெற்றது. இதில் அதிபர் ட்ரம்ப் தீபவிளக்கு ஏற்றி வைத்தார்.

பின்னர் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லும் விதமாக அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் புத்த மதத்தினர், சீக்கியர்கள், ஜெயினர்கள் கொண்டாடும் தீபாவளி ஒளி திருநாளில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்துக்களை அதிபர் ட்ரம்ப் குறிப்பிடவில்லை என்று பலரும் கண்டனம் ட்விட் செய்யத்தொடங்கினர். இதில் CNN செய்தியாளர் மனு ராஜு தனது ட்விட்டரில் ‘‘இந்துக்கள் பெரும்பான்மையினர் கொண்டாடுவது தீபாவளி’’ என்று குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் தன் பதிவை நீக்கி மற்றொரு பதிவை வெளியிட்டார் அதிலும் இந்துக்கள் என்ற வார்த்தை இடம்பெறவில்லை. இதனை மீண்டும் CNN மனு ராஜு சுட்டிக் காட்டிய பிறகு தனது மூன்றாவது பதிவில் அதிபர் ட்ரம்ப் ‘இந்துக்களின் பண்டிகை தீபாவளியை கொண்டாடுவது எனக்கு கிடைத்த மிகப் பெரிய மரியாதை’’ என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Top