You are here
Home > Uncategorized > வி.வி.எஸ்.லட்சுமண் வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் மோசடி !

வி.வி.எஸ்.லட்சுமண் வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் மோசடி !

கொல்கத்தா : வி.வி.எஸ்.லட்சுமண் வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் மோசடி செய்த கொல்கத்தா வாலிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண். டெஸ்ட் போட்டியில் நிலைத்து நின்று விளையாடியதால் இவர் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக கருதப்பட்டார்.கடந்த ஆண்டு அவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் வி.வி.எஸ்.லட்சுமணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.இணையதளத்தில் பொருட்கள் வாங்கியதாக அவரது கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் பணம் எடுக்கப்பட்டு இருந்தது. தனது கணக்கில் இருந்த ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ஐதராபாத் பொலிசில் புகார் செய்தார்.இந்நிலையில் லட்சுமண் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்தை எடுத்து மோசடி செய்தவர் கொல்கத்தா வாலிபர் என்று தெரிந்தது.அவரது பெயர் இஷாகல் ஷேக் (32).

அவருக்கு கொல்கத்தா சால்ட்லேக் பகுதியில் உள்ள வங்கியில் கணக்கு இருந்தது. நீண்ட காலமாக அந்த வங்கி கணக்கை ஷேக் பராமரிக்கவில்லை. கடந்த புதன்கிழமை அவர் தனது வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் பணத்தை டெபாசிட் செய்துள்ளார்.இதில் சந்தேகம் அடைந்த வங்கி மேலாளர் பொலிசிற்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அந்த பணம் லட்சுமண் வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்யப்பட்ட பணம் என தெரியவந்தது. அவரை பொலிசார் கைது செய்தனர்.

Leave a Reply

Top