You are here
Home > தலைப்புச்செய்தி > விராட் கோலி் பிராட்மேன் சாதனையை முறியடிக்க முடியாது!

விராட் கோலி் பிராட்மேன் சாதனையை முறியடிக்க முடியாது!

கிரிகெட்டில் பல ஜாம்பவானின் சாதனைகளை தகர்த்து வரும் இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை தென் ஆப்பிரிக்கா முன்னால் கேப்டன் கிரேம் ஸ்மித் ”சூப்பர்ஸ்டார்” என்று புகழ்ந்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஸ்டீவ் வாஹீம் கோலியை புகழ்ந்துள்ளார்.
 
இதுக்குறித்து அவர் கூறும்போது அனைவரும் விராட் கோலியைப் புகழ்வதற்குக் காரணம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவமும், கிரிக்கெட்டில் சாதிக்கும் வெறியுமாகும். மேலும் காயம் ஏதும் ஏற்படாமல் இருந்தால் டான் பிராட்மேன் சாதனையைத் தவிர அனைவரின் சாதனையையும் கோலி முறியடிப்பார் என்றே கருதுகிறேன் என்று கூறினார்.
 
விராட் கோலி கடந்த ஜனவரி 2016லிருந்து 28 சதங்களும் 7,824 ரன்களுடன் உலகின் அதிக ரன்களை எடுத்தவராக திகழ்கிறார்.

Leave a Reply

Top