You are here
Home > Uncategorized > வாசிம் அக்ரமுக்கு அபராதம்!

வாசிம் அக்ரமுக்கு அபராதம்!

லாகூர்:பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம்.

இவர் லாகூரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம் அருகே உள்ள சாலையில், தனது காரில் 78 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து கண்காணிப்பாளர் ஒருவர், அக்ரமின் காரை தடுத்து நிறுத்தி, இந்த சாலையில் 60 கி.மீ. வேகத்தில் மட்டுமே காரை ஓட்ட வேண்டும். நீங்கள் அதை மீறியதால் அபராதம் கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

உடனே அவரிடம் வாக்குவாதம் செய்ய விரும்பாத அக்ரம், ரூ.500 அபராதத்தை செலுத்திவிட்டு சென்றுள்ளார்.

Leave a Reply

Top