You are here
Home > Uncategorized > வழக்குரைஞர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!

வழக்குரைஞர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!

ஸ்ரீநகர்:வழக்குரைஞர்கள் சமூகப் பொறுப்புள்ளவர்களாக செயல்பட வேண்டுமென்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமஸ் கபீர் அறிவுரை கூறியுள்ளார்.

ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத் துறை மாணவர்கள் மத்தியில் அவர் பேசியது: நீங்கள் அனைவரும் சட்டப் பணியாற்ற இருக்கிறீர்கள். வழக்குரைஞர்கள் அனைவருக்கும் சமூகப் பொறுப்பு உண்டு. சட்டம் என்பது நீங்கள் மட்டுமே பயன்படுத்தி பலன் பெறுவதற்கானது அல்ல. நமது சமூகம் முழுமைக்கானது.

இன்றைய காலகட்டத்தில் வழக்குரைஞர்கள் என்றாலே மோசடிக்காரர்கள் என்றும், தங்கள் நலனுக்காக எதையும் செய்யக் கூடியவர்கள் என்றும் வர்ணிக்கப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். தாங்கள் சமூகப் பொறுப்புள்ளவர்கள் என்பதை வழக்குரைஞர்கள் நிரூபிக்க வேண்டும். முன்பு இருந்ததைவிட சட்டத்துறை இப்போது பல்வேறு வழிகளில் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் சந்தித்து வருகிறது. இன்டர்நெட் உள்ளிட்ட சேவைகளால் தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புரட்சி, சர்வதேச அளவில் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், சட்ட நிகழ்வுகளை எளிதில் தெரிந்து கொள்ளவும் உதவுகிறது. நமது துறையில் ஆர்வத்தை அதிகரித்துக் கொண்டு கடினமாக உழைப்பதன் மூலமே முழுமையாகக் கற்றுத் தேர முடியும்.

சட்டமாணவர்களுக்கு சரியான முறையில் ஊக்கம் அளிக்கப்படுவதன் மூலம் அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று அல்டமஸ் கபீர் பேசினார்.

Leave a Reply

Top