You are here
Home > Uncategorized > வழக்கறிஞர் சாந்திபூஷணுக்கு எதிரான சி.டி போலியானது-மத்திய ஃபாரன்சிக் லேபரட்டரி

வழக்கறிஞர் சாந்திபூஷணுக்கு எதிரான சி.டி போலியானது-மத்திய ஃபாரன்சிக் லேபரட்டரி

புதுடெல்லி:அன்னா ஹஸாரே குழுவைச் சார்ந்த பிரபல வழக்கறிஞரான சாந்திபூஷண், சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், மாநிலங்களவை எம்.பி அமர்சிங் ஆகியோரின் உரையாடல்கள் அடங்கிய சி.டி போலியானது என சண்டிகரில் அமைந்துள்ள மத்திய தடவியல் அறிவியல் சோதனைக் கூடம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

முன்பு நடந்த 2 பரிசோதனைகளிலிருந்து இந்த சோதனை வித்தியாசமானதாகும்.  சி.டி உண்மையானது அல்ல என்றும், எடிட்
செய்யப்பட்டுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய இந்த சி.டி ஒரு பிரபல பத்திரிகையின் அலுவலகத்தில் முதலில் கிடைத்தது. சி.டி பரவலான வேளையில் சாந்திபூஷண் டெல்லி போலீஸில் புகார் அளித்தார். சி.டி போலியானது என்றும், முலாயம்சிங் மற்றும் அமர்சிங்குடன் தான் பேசவில்லை எனவும் புகாரில் பூஷண் குறிப்பிட்டிருந்தார்.

டெல்லி மற்றும் சண்டிகரில் உள்ள ஃபாரன்சிக் லேப்களிலும், செய்தி ஒலிபரப்பு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு கீழ் செயல்படும் ஸெர்ட்-இன் என்ற நிறுவனத்திலும் இந்த சி.டி பரிசோதிக்கப்பட்டது. ஆனால் அவை சி.டி உண்மையானது என கூறின. தற்பொழுது மத்திய ஃபாரன்சிக் லேப் நடத்திய சோதனையில் சி.டி போலியானது என தெரியவந்துள்ளது.

Leave a Reply

Top