You are here
Home > Uncategorized > வராக்கடனாக எழுதப்பட்ட கார்ப்பரேட்டுகளின் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன்!

வராக்கடனாக எழுதப்பட்ட கார்ப்பரேட்டுகளின் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன்!

புதுடெல்லி: கடந்த 13 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டாத ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் தொகையை வராக்கடனாக வங்கிகள் தள்ளுபடி செய்துவிட்டதாக  ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு விவசாயிகளின் 60 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்ததாக 2008-ஆம் ஆண்டு பெருமை பேசியது. ஆனால், கார்ப்பரேட்டு கம்பெனிகள் கட்டாமல் வங்கிகளுக்கு டிமிக்கி கொடுத்த தொகை ஒரு லட்சம் கோடியாகும். தள்ளுபடி செய்த கார்ப்பரேட் கடன்களில் 95 சதவீதமும் பெரிய கம்பெனிகளுடையது. ஆனால் எல்லோரும் விவசாய கடனை தள்ளுபடி செய்தது குறித்து கவலைப்படுகின்றனர் என்று சக்ரவர்த்தி கூறுகிறார்.

‘திரும்ப வராது என்று உறுதி செய்த கடன்களை தள்ளுபடி செய்து செயல்தன்மை இல்லாத சொத்துகளை வங்கிகள் குறைப்பது வழக்கம். 2007-13 காலக் கட்டத்தில் 4,94,836 கோடி ரூபாய் கடன்களை வங்கிகள் செயல்திறன் இல்லாத சொத்துகள் என்று மாற்றி விட்டன. கார்ப்பரேட் கடன்களைக் கண்காணிக்க இந்தியாவில் தனியாக எவ்விதக் கட்டமைப்பும் இல்லை. 2007-13 காலகட்டத்தில் இந்தியாவில் 10 பெரிய கார்ப்பரேட்டுகளின் கடன் மட்டும் 10 மடங்கு அதிகரித்துள்ளது’ என்று சக்ரவர்த்தி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Top