You are here
Home > தொடர்கள் > வரலாற்றின் வேர்கள்! – அல் பைதர் (கி.பி 1197-1248)

வரலாற்றின் வேர்கள்! – அல் பைதர் (கி.பி 1197-1248)

அல் பைதர் (கி.பி 1197-1248)

இவர் ஸ்பெயினின் தலை சிறந்த தாவர ஆராய்ச்சி நிபுணரும், மருந்துகளை தயாரிக்கும் நிபுணரும் ஆவார். இவர் எழுதிய ‘ஜாஹின்-கிதாப் அல் ஹையவான்’ என்னும் நூல் உயிரியல் துறையில் புகழ் பெற்றதாகும்.

இன்றைக்கு பறவைகள் குறித்தான பல்வேறு விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால்  பறவைகள் குடிபெயர்ந்து வாழ்வதைக் கண்டறிந்து அதனை சுமார் பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னரே உலகிற்கு அறிவித்த முதல் விஞ்ஞானி இவரே. என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

கி.பி 1227-ல் இவர் எகிப்திய அரசாங்கத்தால் சிறப்பு ஆயுர்வேத நிபுணராக நியமிக்கப்பட்டார். இவர் தனது ஆய்விற்காக தாவரங்களை சேகரிக்க ஒட்டுமொத்த அரேபிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டதோடு அல்லாமல் ஆப்பிரிக்காவின் தற்போதைய லிபியா துனிசியா நாடுகளுக்கும் சென்றுள்ளார்.

தாவரவியல் துறையில் இவர் எழுதிய ‘கிதாப் ஜாமி ஃபில் அத்வியா’ என்னும் நூல் மிகவும் புகழ் பெற்றதாகும். பதினாறாம் நூற்றாண்டு வரை இந்த நூலே தாவரவியல் துறையின் அகராதியாக விளங்கியது. இந்த நூலில் அவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட தாவர வகைகள் குறித்து விளக்கியுள்ளார். இந்த நூல் கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அல் பைதரின் ‘அல் முலுக்கினி ஃபி அல் அத்வியா’ என்னும் நூல் மருத்துவ துறையின் அகராதியாக விளங்கியது. இந்நூலில் அல் பைதர் அவர்கள் தலை, கண், காதுகளில் ஏற்படும் நோய்களுக்குரிய நிவாரணங்கள் குறித்து விளக்கியுள்ளார்.

அல் பைதரின் படைப்புகள் கிழக்கு மற்றும் மேற்கத்திய மருத்துவ  துறையில் மிகப்பெரும்  ஆதிக்கத்தை நிலைநாட்டியது என்றால் அது மிகையாகாது. இப்படி தலைசிறந்த தாவரவியல் ஆய்வாளர் மற்றும் மருத்துவ நிபுணராக விளங்கிய அல் பைதர் 1248-ஆம் ஆண்டு சிரியா தலைநகர் டமாஸ்கஸில் காலமானார்.

அன்பார்ந்த வாசகர்களே! இனிவரும் காலங்களில் நம்முடைய ஆய்வினை துறைசார்ந்த ரீதியாக மேற்கொள்வோம். ஏனெனில் துறை ரீதியாக ஆய்வு செய்யும் போது அத்துறையில் தலைசிறந்த விளங்கிய நம் முன்னோர்கள் அனைவரின் பங்கினை அறிய ஏதுவாக இருக்கும்.

இன்ஷா அல்லாஹ்…

சமூக முன்னேற்றத்திற்காக வரலாற்று ஆய்வுத் தொடரும்….

ஹாரிஸ்

Leave a Reply

Top