You are here
Home > Uncategorized > வணிக ரீதியான திரைப்படங்களில் இனி நடிக்கமாட்டேன்! – வீணா மாலிக்

வணிக ரீதியான திரைப்படங்களில் இனி நடிக்கமாட்டேன்! – வீணா மாலிக்

இஸ்லாமாபாத்: வணிக ரீதியான திரைப்படங்களில் இனி நடிக்கமாட்டேன் என்று வீணா மாலிக் தெரிவித்துள்ளார். மார்க்க ரீதியான, சமூக ரீதியான திரைப்படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கணவருடன் உம்ரா புனித கடமையை நிறைவேற்ற மக்கா வந்துள்ள வீணா மாலிக் தெரிவித்துள்ளார்.

முன்னர் இந்திய தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ள வீணா மாலிக் மேலும் கூறியதாவது:

“வாழ்க்கையில் ஏராளமான தவறுகளைச் செய்துள்ளேன். இனி இஸ்லாத்தின் அடிப்படையிலான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்.”

தன் கணவர் அஸத் பஷீர் கானுடன் இணைந்து ஒரு பாகிஸ்தான் செய்திச் சானலில் காலை நிகழ்ச்சி ஒன்றை வழங்க உள்ளார் வீணா மாலிக். கடந்த ஆண்டு துபையில் தொழிலதிபரும், பாடகருமான அஸத் பஷீரை திருமணம் புரிந்தார் மாலிக். அதன் பிறகு அவரது வாழ்க்கையில் பெருமாற்றம் உருவானது.

தனது வாழ்க்கைப் பாணி மாறக் காரணம் இஸ்லாமிய அறிஞரான மவ்லானா தாரிக் ஜமீலுடனான சந்திப்பு என்று அண்மையில் தொலைக்காட்சிச் சானலில் வீணா மாலிக் தெரிவித்திருந்தார். வீணா மாலிக் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய செய்திகள் கடந்த காலங்களில் வெளியாகியிருந்தன.

Leave a Reply

Top