You are here
Home > Uncategorized > வட இந்தியாவில் கடுங்குளிர்: 26 பேர் மரணம்

வட இந்தியாவில் கடுங்குளிர்: 26 பேர் மரணம்

புதுடெல்லி:கடுங்குளிர் காரணமாக வட இந்தியாவில் 26 பேர் மரணமடைந்துள்ளனர். உ.பி மாநிலத்தில் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். இங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டும் ஆறுபேர் மரணித்துள்ளனர்.

2.2 டிகிரி செல்சியஸ் பதிவான உ.பி மாநிலம் மிகவும் குளிர்ச்சியான பகுதியாகும். டெல்லியில் கடுமையான குளிர் நிலவியது. கனத்த மூடுபனி காரணமாக பெரும்பாலான இடங்களில் ரெயில்-விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் கடுங்குளிர் நிலவுகிறது.

Leave a Reply

Top