You are here
Home > Uncategorized > லோக்கர்பி வழக்கின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பும் ரகசிய அறிக்கை!

லோக்கர்பி வழக்கின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பும் ரகசிய அறிக்கை!

தோஹா:லோக்கர்பி விமான விபத்து வழக்கில் தண்டிக்கப்பட்ட லிபியா குடிமகன் அப்துல் பாஸித் அல் மக்ரஹி மீதான குற்றச்சாட்டுகள் தவறானது என்று ஸ்காட்லாந்து க்ரிமினல் கேஸ் ரிவியூ கமிஷன் அறிக்கையில் கூறியுள்ளது.

லோக்கர்பி விமானத்தை குண்டுவைத்து தகர்த்ததாக குற்றம் சாட்டி நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மக்ரஹிக்கு எதிராக சாட்சியம் அளித்த மால்டாவை சார்ந்தவரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு தயார் செய்த அறிக்கையை அல் ஜஸீரா வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்ட ஒரு மணிநேரம் நீண்ட ஆவணப்படத்தை அல்ஜஸீரா விரைவில் ஒளிபரப்ப உள்ளது.

மக்ரஹிக்கு எதிராக சாட்சியம் அளித்த மால்டாவை சார்ந்தவரின் நம்பகத்தன்மை குறித்தும், அவரது பொருளாதார விருப்பங்களை குறித்தும் ஆவணப்படம் மூலம் வெளியிடப்படும். விஞ்ஞான ரீதியிலான ஆதாரங்களின் அடிப்படையில் ஸ்காட்டிஷ் கமிஷன் அறிக்கையை தயார் செய்துள்ளது.

மக்ரஹி மீது குற்றம் சுமத்த மால்டாவைச் சார்ந்தவரின் வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாக கொண்ட விசாரணை கமிஷனின் நடவடிக்கையின் போலித்தன்மை குறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1988-ஆம் ஆண்டு பான் அமெரிக்கன் விமானம் ஸ்காட்லாந்தில் உள்ள லோக்கர்பியில் நொறுங்கி விழுந்தது. இவ்விபத்தில் அமெரிக்கர்கள் உள்பட 259 பேர் கொல்லப்பட்டனர். லண்டனில் ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து ஆம்ஸ்டர்டாமுக்கு செல்லும் வேளையில் விமானம் விபத்தில் சிக்கியது.

Leave a Reply

Top