You are here
Home > Uncategorized > லியாகத் அலி ஷாவின் கைது:டெல்லி போலீஸ் ஒப்படைத்தது பழுதடைந்த சி.சி.டி.வி ஹார்ட் டிஸ்க்!

லியாகத் அலி ஷாவின் கைது:டெல்லி போலீஸ் ஒப்படைத்தது பழுதடைந்த சி.சி.டி.வி ஹார்ட் டிஸ்க்!

புதுடெல்லி:பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரில் இருந்து சரணடைய வந்த முன்னாள் ஹிஸ்புல் முஜாஹிதீன் உறுப்பினரை டெல்லியில் குண்டுவெடிப்பைநிகழ்த்தவந்த தீவிரவாதி என்று டெல்லி ஸ்பெஷல் பிரிவு போலீஸ் கூறுவது பொய் என்பதை நிரூபிக்க உதவும் சி.சி.டி.வி காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் பழுதடைந்துள்ளது.

லியாகத்தை கைதுச் செய்த பிறகு ஜும்ஆ மஸ்ஜிதுக்கு அருகே உள்ள ஒரு லாட்ஜில் இருந்து டெல்லி  போலீஸ் ஆயுதங்களையும், வெடிப்பொருட்களையும் கைப்பற்றியிருந்தது.குண்டுவெடிப்பை நிகழ்த்த லியாகத்தின் உதவியாளர் கொண்டுவந்தது என்பது டெல்லி போலீஸின் வாதமாகும். லாட்ஜ் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள காட்சிகளை பதிவுச் செய்த சி.சி.டி.வியின் 30 ஹாண்ட் டிஸ்க்குகளை ஆதாரங்களாக போலீஸ் கைப்பற்றியிருந்தது. இந்த டிஸ்குகளைபழுதடைந்த நிலையில் என்.ஐ.ஏவுக்கு(தேசிய புலனாய்வு ஏஜன்சிக்கு) டெல்லி ஸ்பெஷல் பிரிவு போலீஸ் ஒப்படைத்துள்ளது.

லாட்ஜில் வெடிப்பொருட்களையும், ஆயுதங்களையும் கொண்டு வைத்தது யார்? என்பதை கண்டுபிடிக்க சி.சி.டி.வி காட்சிகள் அடங்கிய டிஸ்குகளை ஆராய என்.ஐ.ஏ முடிவுச் செய்தது.சி.பி.ஐயின் செண்ட்ரல் ஃபாரன்சிக் சயன்ஸ் லேபராட்டரிக்கு இதனை என்.ஐ.ஏ அனுப்பிவைத்தது. ஆனால், ஹார்ட் டிஸ்குகள் பழுதடைந்துள்ளதாகவும், காட்சிகள் தெரியவில்லை என்றும் ஃபாரன்சிக் லேபராட்டரி தெரிவித்தது. இதனை ஃபாரன்சிக் லேப் என்.ஐ.ஏவுக்கு தெரிவித்துள்ளது. கைப்பற்றிய சி.சி.டி.வியின் காட்சிகள் பதிவுச் செய்யும் சிஸ்டம் ஜும்ஆ மஸ்ஜித் போலீஸ் ஸ்டேஷனில் இணைக்கப்பட்டிருந்தது. இதனை நிறுவிய எலக்ட்ரானிக் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிட்டடிடம், ஹார்ட் டிஸ்கில் அடங்கிய விபரங்கள் கிடைப்பதற்காக என்.ஐ.ஏ அணுகியுள்ளது.

Leave a Reply

Top