பெங்காசி:மக்கள் புரட்சியின்போது கொலைச் செய்யப்பட்ட லிபியாவின் அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் ஆதரவாளர்கள் லிபியாவின் பனீவலீத் நகரத்தை கைப்பற்றியுள்ளனர்.
தயாரிப்புகளுடன் வந்த நூற்றுக்கணக்கான கடாஃபி ஆதரவாளர்கள் திங்கள் கிழமை மாலை மேற்கு நகரமான பனீவலீதை கைப்பற்றியதாக உள்ளூர் கவுன்சில் தலைவர் முபாரக் அல் ஃபதம்னி தெரிவித்துள்ளார். இவர்கள் என்.டி.சி தற்காலிக அரசின் கொடியை மாற்றினர். பனீவலீதில் என்.டி.சி படையினருடன் தொடர்புக் கொள்ள முடியவில்லை என பெங்காசியில் கண்காணிப்பாளராக செயல்படும் என்.டி.சி கமாண்டர் அலி அல் ஃபதம்னி கூறியுள்ளார்.
******************* ************************ ************************