You are here
Home > Uncategorized > லிபியா:போராட்டத்தில் சிறிய முன்னேற்றம் – எதிர்ப்பாளர்கள்

லிபியா:போராட்டத்தில் சிறிய முன்னேற்றம் – எதிர்ப்பாளர்கள்

திரிபோலி:கத்தாஃபி ஆதரவு ராணுவத்திற்கெதிரான போராட்டத்தில் சிறியதொரு வெற்றியை ஈட்டியுள்ளதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த 48 மணிநேரத்திற்குள் ராணுவம் எதிர்ப்பாளர்களை தோற்கடிப்பார்கள் என கத்தாஃபியின் மகன் ஸைஃபுல் இஸ்லாம் அறிவித்ததைத் தொடர்ந்து எதிர்ப்பாளர்களின் அறிக்கை வெளியாகியுள்ளது.

எதிர்ப்பாளர்களின் வலுவான கட்டுப்பாட்டிலுள்ள பெங்காசியில் நேற்றும் கடுமையான மோதல் நிகழ்ந்தது. கத்தாஃபியின் ராணுவம் நடத்திய அக்கிரமத் தாக்குதலில் நகரத்தில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அஜ்தாபியிலும், மிஸ்ரத்தாவிலும் இரு தரப்பினருக்குமிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.

துப்பாக்கிச் சண்டையில் 80 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக எதிர்ப்பாளர்களின் தலைவர் தெரிவித்துள்ளார். அதேவேளையில், லிபியாவில் அவசரமாக விமானம் பறப்பதை தடைச்செய்ய ஐ.நாவில் லிபியாவின் துணை தூதரக பிரதிநிதி இப்ராஹீம் தபாஷி ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், லிபியாவில் சண்டை நிறுத்தத்தை அறிவிக்க வேண்டுமென ரஷ்யா கோரிக்கை விடுத்ததை ஐ.நா  பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்துவிட்டது.

Leave a Reply

Top