You are here
Home > Uncategorized > லிபியா:நியூயார்க் டைம்ஸின் நான்கு பத்திரிகையாளர்களை காணவில்லை

லிபியா:நியூயார்க் டைம்ஸின் நான்கு பத்திரிகையாளர்களை காணவில்லை

நியூயார்க்:லிபியாவில் கத்தாஃபிக்கு எதிரான போராட்டத்தைக் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தங்களின் 4 பத்திரிகையாளர்களை காணவில்லை என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

புலிஸ்டர் விருது பெற்றவரும், பெய்ரூத் பீரோ முதன்மை அதிகாரியுமான ஆண்டனி ஷாதித் உள்பட நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.

செய்தியாளர் ஸ்டீஃபன் ஃபாரெல், கேமாராமேன்களான லின்ஸெ அதாரியோ, டைலர் ஹிக்ஸ் ஆகியோர் இதர நபர்களாவர்.

கடந்த புதன்கிழமை முதல் நான்கு பேரையும் தொடர்புக்கொள்ள இயலவில்லை என நியூயார்க் டைம்ஸின் எக்ஸ்க்யூடிவ் எடிட்டர் பில் கெல்லர் தெரிவித்துள்ளார்.

அஜ்தாபியில் எதிர்ப்பாளர்களின் போராட்டத்தைக் குறித்து செய்தி சேகரிப்பதாக செவ்வாய்க்கிழமை இவர்கள் பத்திரிகை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்திருந்தனர். இவர்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக லிபியா அரசு தெரிவித்துள்ளதாக டைம்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டீஃபன் ஃபாரெலை 2009 ஆம் ஆண்டு தாலிபான்கள் கடத்திச் சென்ற போதிலும் பின்னர் விடுவித்தனர். தாங்கள் விரும்பாத செய்திகளை வெளியிடுவதை தடுப்பதற்காக கத்தாஃபியின் ராணுவம் இவர்களை கைது செய்திருப்பதாக நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

Leave a Reply

Top