You are here
Home > Uncategorized > லிபியா:எண்ணெய் டாங்க் வெடித்து 100 பேர் மரணம்

லிபியா:எண்ணெய் டாங்க் வெடித்து 100 பேர் மரணம்

திரிபோலி:லிபியா நகரமான ஸிர்த்தேவில் எண்ணெய் டாங்க் வெடித்து 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.திங்கள் கிழமை நள்ளிரவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. எரிபொருளை நிரப்பை கார்கள் காத்து நிற்கும் வேளையில் டாங்க் வெடித்துச்சிதறியது.டாங்கின் அருகிலிலுள்ள ஜெனரேட்டரிலிருந்து வெளியான தீப்பொறிதான் டாங்க் வெடிக்க காரணம் எனவும், இதில் மர்மம் ஒன்றுமில்லை எனவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மரணித்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை.மரண எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.100க்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளதாக என்.டி.சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிரியாவில் அல்ராய் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. கடுமையான காயமடைந்த 11 பேர் ஸின மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் பிறந்த நகரமான ஸிர்த்தே அவருடைய செல்வாக்கு நிறைந்த பகுதியாகும்.கத்தாஃபி ஆதரவாளர்கள் பதிலடி கொடுப்பார்கள் என ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் எச்சரிக்கை விடுத்திருந்தது.

Leave a Reply

Top