You are here
Home > Uncategorized > இந்தியா > ராமர் கோயில் அதே இடத்தில் காட்டப்படும் – அமித்ஷா பேச்சு!

ராமர் கோயில் அதே இடத்தில் காட்டப்படும் – அமித்ஷா பேச்சு!

பாஜக தலைவர் அமித்ஷா புதன்கிழமை அன்று
மும்பையில் நடைபெற்ற ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சியில் பேசியபோது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்பதில் உறுதியான நம்பிக்கை தமக்கு இருப்பதாக கூறினார். வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வரும் ஜனவரி மாதம் நடைப்பெற இருக்கையில் இது பற்றி தொடர்ந்து பாஜக தலைவர்கள் கருத்து கூறுவது நாட்டில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. 

இதுகுறித்து விரிவாக பேசிய அமித்ஷா அவர் ஜனவரி மாதம் தொடங்கும் விசாரனையின் மீது எமக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.  தீர்ப்பு அதே இடத்தில் ராமர் கோயில் கட்டப்படுவதை உறுதிப்படுத்தும் என்று நம்புகிறேன் என்றார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட வேண்டும் என்பது எங்களுடைய தனிபட்ட விருப்பம் மட்டுமல்ல நாட்டு மக்களின் ஆசையும் கூட. இதை பூர்த்தி செய்வதில் பாஜக முயற்ச்சி செய்யும் என்றார்.

மேலும் சபரிமலை விவகாரம் குறித்து பேசிய அமித்ஷா “சபரிமலையில் பெண்கள் நுழைய அனுமதி அளிக்க கூடாது என்பது மத நம்பிக்கையை சார்ந்தது. அதுகுறித்து நீதிமன்றங்கள் கருத்து தெரிவிப்பது மற்றும் தீர்ப்பு வழங்குவது ஏற்புடையது அல்ல.  

Leave a Reply

Top