You are here
Home > Uncategorized > ரஞ்சன் மத்தாய் புதிய வெளியுறவுத்துறை செயலாளர்

ரஞ்சன் மத்தாய் புதிய வெளியுறவுத்துறை செயலாளர்

புதுடெல்லி:இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் பதவியில் மீண்டும் மலையாளிகளின் ஆதிக்கம்.பிரான்சில் இந்திய தூதராக பணியாற்றும் ரஞ்சன் மத்தாயி பதவி விலகும் நிருபமா ராவுக்கு பதிலாக இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக பதவி ஏற்க உள்ளார்.

ரஞ்சன் மத்தாய் ஆகஸ்ட் மாதம் முதல்தேதியில் வெளியுறவுத்துறை செயலாளராக பதவியை ஏற்றுக்கொள்வார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அவர் இப்பதவியில் நீடிப்பார்.

புனே பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் இளங்கலை பட்டம் பெற்ற ரஞ்சன் 1974-ஆம் ஆண்டு ஐ.எஃப்.எஸ்(இந்தியன் ஃபாரின் சர்வீஸ்) பாட்சில் வெளியுறுவுத்துறையில் சேர்ந்தார்.

வியன்னா, கொழும்பு, வாஷிங்டன், டெஹ்ரான், ப்ரஸ்ஸல்ஸ் ஆகிய நாடுகளில் செயல்படும் இந்திய தூதரகத்தில் பணியாற்றியவர்.1995 ஆம் ஆண்டு முதல் 1998-ஆம் ஆண்டுவரை வெளியுறவுத்துறையில் துணை செயலாளராக பதவி வகித்தார்.லண்டனில் துணை ஹைக்கமிஷனராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

1998 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலிலும், 2001 முதல் 2005 வரை கத்தரிலும் தூதராக பணியாற்றியுள்ளார்.

ஜூலை 31-ஆம் தேதி வெளியுறவுத்துறை செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் நிருபமா ராவ் அமெரிக்காவின் அடுத்த இந்திய தூதராக பதவி ஏற்பார்.

Leave a Reply

Top