You are here
Home > Uncategorized > யெமன் அதிபர் ஸாலிஹ் சிகிட்சைக்காக சவூதியில்

யெமன் அதிபர் ஸாலிஹ் சிகிட்சைக்காக சவூதியில்

ஸன்ஆ:பழங்குடியின போராளிகளின் தாக்குதலில் காயமடைந்த யெமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் சிகிட்சைக்காக சவூதி அரேபியாவின் ரியாதிற்கு வந்துள்ளார். பிரதமர், பாராளுமன்ற சபாநாயகர் உள்பட காயமடைந்த பிரபல தலைவர்களும், ராணுவ அதிகாரிகளும் சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.

கிங் காலித் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஸாலிஹ் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். முகத்திலும், நெஞ்சிலும் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தலையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக ஆளும் கட்சியான ஜெனரல் பீப்பிள்ஸ் காங்கிரஸின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஸாலிஹ் யெமன்நாட்டிற்கு திரும்பிவருவாரா? என்பது குறித்து சந்தேகம் நிலவுகிறது. துணை அதிபர் அப்துற்றப் மன்சூர் ஹாதி செயல் அதிபராக பொறுப்பேற்றுள்ளார் என தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராணுவத்தின் உச்சபட்ச கமாண்ட் பொறுப்பையும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பிரதிநிதிகள் அப்துறப்புடன் தொலைபேசியில் உரையாடினர்.

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு தலைவர் ஜான் ப்ரன்னன் அவருடன் தொடர்பு கொண்டார். உரையாடலின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே, ஸன்ஆவின் வடக்கே ராணுவ தலைமையகத்தின் மீது நேற்று நடந்த க்ரேனேடு தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். தாஇஸிலும் தாக்குதல் நடந்ததாக செய்திகள் கூறுகின்றன.

ஸாலிஹ் யெமனிலிருந்து வெளியேறியதை அறிந்தவுடன் நகரங்களில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஸன்ஆ பல்கலைக்கழக சதுக்கத்தில் மக்கள் ஆனந்த நடனமாடினர். புதிய யெமன் பிறந்திருக்கிறது என அவர்கள் உரக்க முழங்கினர்.

Leave a Reply

Top