You are here
Home > Uncategorized > யெமன்:ஒப்பந்தத்திற்கு எதிராக போராட்டம்: ஐந்து பேர் பலி

யெமன்:ஒப்பந்தத்திற்கு எதிராக போராட்டம்: ஐந்து பேர் பலி

ஸன்ஆ:அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹை விசாரணை நடவடிக்கைகளிலிருந்து விலக்கிய அதிகார மாற்ற ஒப்பந்தத்திற்கு எதிராக போராட்டம் வலுவடைந்துள்ள யெமனில் ஸாலிஹ் ஆதரவாளர்களின் தாக்குதலில் நேற்று ஐந்துபேர் கொல்லப்பட்டனர்.

புதன்கிழமை வளைகுடா நாடுகளின் நடுநிலையில் கையெழுத்திடப்பட்ட அதிகார ஒப்படைப்பு ஒப்பந்தத்திற்கு எதிராக மீண்டும் யெமனில் போராட்டம் தீவிரமடைந்தது. மோதலில் ஏராளமானோருக்கு காயமேற்பட்டது.

ஸாலிஹ் ஆட்சிக்கு எதிராக கடந்த பிப்ரவரியில் துவங்கிய ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை தொடர்ந்து வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் தலைமையில் அதிகாரத்தை ஒப்படைக்கும் ஒப்பந்தம் உருவானது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஸாலிஹ் துணை அதிபரிடம் அதிகாரத்தை ஒருவாரத்திற்குள் ஒப்படைப்பார்.

எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகளின் பெயரால் ஸாலிஹை விசாரணைச் செய்வதிலிருந்தும் விலக்களிக்கப்பட்டுள்ளது. இது எதிர்ப்பாளர்களை ஆவேசமடையவைத்துள்ளது.

Leave a Reply

Top