You are here
Home > Uncategorized > மோடி வருகையை கண்டித்து எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் முற்றுகை:கேம்பஸ் ஃப்ரண்ட்

மோடி வருகையை கண்டித்து எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் முற்றுகை:கேம்பஸ் ஃப்ரண்ட்

சென்னை: நரேந்திர மோடியின் சென்னை வருகையை எதிர்த்து சென்னை  SRM கல்லூரியை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

குஜராத முதல்வர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தார். இவர் இன்று சென்னை SRM கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், மோடியை அழைத்து வந்து பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளச் செய்த எஸ்.ஆர்.எம் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து. ‘கேம்பஸ் ப்ராண்ட் ஆப் இந்தியா’ அமைப்பின்  சார்பில் சென்னை வடபழனியில் உள்ள SRM பல்கலை கழகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

அப்போது அமைதிப் பூங்காவான தமிழகத்தில் குஜராத்தில் முஸ்லிம்களின் படுகொலைக்குக் காரணமன மோடியை அழைத்து வந்து பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளச் செய்த எஸ்.ஆர்.எம் கல்லூரி நிர்வாகத்தை கண்டிப்பதாக மாணவர்கள் கோஷம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

 

Leave a Reply

Top