You are here
Home > Uncategorized > மேற்கு கரையில் நடப்பது பயங்கரவாதம்: இஸ்ரேலை குற்றம் சாட்டும் அமெரிக்காவின் அறிக்கை!

மேற்கு கரையில் நடப்பது பயங்கரவாதம்: இஸ்ரேலை குற்றம் சாட்டும் அமெரிக்காவின் அறிக்கை!

டெல் அவீவ்:ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் இஸ்ரேலிய யூதர்கள் நடத்தும் தாக்குதல்கள் பயங்கரவாதம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. பயங்கரவாதத்தைக் குறித்த 2011-ஆம் ஆண்டைய அறிக்கையில் அமைச்சகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

மேற்கு கரையில் ஃபலஸ்தீன் குடிமக்கள் மீது அங்கு ஆக்கிரமித்து குடியமர்ந்துள்ள யூதர்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இத்தாக்குதலை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் பயங்கரவாதம் என குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையை இஸ்ரேலிய பத்திரிகையான ஹாரெட்ஸ் தமது இணையதள பதிப்பில் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Top