You are here
Home > Uncategorized > மூன்றாவது டெஸ்டிலும் இன்னிங்ஸ் வெற்றி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா

மூன்றாவது டெஸ்டிலும் இன்னிங்ஸ் வெற்றி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா

பெர்த்:ஆஸ்திரேலியா-இந்திய அணிகளுக்கு இடையில், பெர்த்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.  இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் நடந்துமுடிந்த மூன்று போட்டிகளில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றிப் பெற்றுள்ளது.

இப்போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 161 ரன்களையும், ஆஸ்திரேலியா 369 ரன்களையும் எடுத்தது. பின்னர் 208 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 171 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.  இதன்மூலம் ஆஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் சார்பில் டிராவிட் 47 ரன்களையும், கோலி 75 ரன்களையும் எடுத்தனர்.

பந்துவீச்சில் ஹில்பான்ஹாஸ் 4 விக்கெட்டுக்களையும் சிடில் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். போட்டி நாயகனாக முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியாவின் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply

Top