You are here
Home > Uncategorized > முஸஃபர்நகர் கலவரம்: விசாரணை துவங்கியது!

முஸஃபர்நகர் கலவரம்: விசாரணை துவங்கியது!

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் முஸஃபர்நகரில் கடந்த மாதம் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரம் தொடர்பாக அலகாபாத் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி விஷ்னு சஹாய் திங்கள்கிழமை விசாரணையை தொடங்கினார்.

கவால், மாலிக்புர் கிராமங்களுக்கு சென்ற அவர் கலவரத்தால் பாதிக்கப்பட்டகுடும்பங்களைச் சந்தித்து பேசினார். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று அப்போது அவர் உறுதியளித்தார்.

கலவரத்துக்கான காரணம் குறித்து பயம் இல்லாமல் தகவல் அளிக்கலாம் என்றும் அப்பகுதி மக்களிடம் அவர் கூறினார். ஏராளமானோர் பலியான முஸஃபர்நகர் கலவரத்திற்கு என்ன காரணம், கலவரத்தை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை, வருங்காலத்தில் இதுபோன்ற கலவரங்கள் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்த ஆய்வு நடத்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

அதன்படி, நீதிபதி விஷ்னு சஹாய் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Leave a Reply

Top