You are here
Home > Uncategorized > மும்பை தாக்குதல்:ராணாவுக்கு பங்கில்லை-ஷிகாகோ நீதிமன்றம்

மும்பை தாக்குதல்:ராணாவுக்கு பங்கில்லை-ஷிகாகோ நீதிமன்றம்

ஷிக்காகோ:மும்பை தீவிரவாத தாக்குதலில் தஹாவூர் ராணாவுக்கு பங்கில்லை என ஷிக்காகோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அதேவேளையில் டென்மார்க் நாளிதழிற்கு எதிரான ரகசிய ஆலோசனையிலும், லஷ்கர்-இ-தய்யிபாவுடனும் ராணாவுக்கு தொடர்பிருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

லஷ்கருக்கு உதவி அளித்ததாகவும், நபி(ஸல்…)அவர்களை அவமதிக்கும் வகையில் கார்ட்டூன் வெளியிட்ட டென்மார்க் நாளிதழ் மீது தாக்குதல் நடத்த ரகசிய ஆலோசனை நடத்தியதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த இரண்டு குற்றங்களுக்காகவும் ராணாவுக்கு 15 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என கருதப்படுகிறது.தண்டனை பின்னர் அறிவிக்கப்படும்.

அதேவேளையில் மும்பை தாக்குதலில் ராணாவுக்கு பங்கில்லை என நீதிமன்றம் கூறியது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு வழக்குகளில் ராணா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை கேட்ட அவருடைய மனைவி ஷம்ராஸ் ராணா கதறி அழுதார். தீர்ப்பிற்கு எதிராக அப்பீல் அளிக்கப்போவதாக ராணாவின் வழக்கறிஞர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Top