You are here
Home > Uncategorized > இந்தியா > முதல்வர் ஆதித்தியநாத் கலந்துக்கொண்ட வேலை வாய்ப்பு முகாமில் நாற்காலி, பாட்டில்கள் வீசி சண்டை!

முதல்வர் ஆதித்தியநாத் கலந்துக்கொண்ட வேலை வாய்ப்பு முகாமில் நாற்காலி, பாட்டில்கள் வீசி சண்டை!

உத்தரபிரதேச மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யபட்ட இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாமில் கலந்துக்கொண்ட இளைஞர்கள் நாற்காலி மற்றும் தண்ணீர் பாட்டில்களை வீசி சண்டையில் ஈடுபட்டனர்.

உபி முதல்வர் யோகி ஆதித்தியநாத் மற்றும் மத்திய இரயில்வே துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா ஆகியோர் கலந்துக்கொண்ட அந்த வேலை வாய்ப்பு முகாம் கடந்த சனிக்கிழமை அன்று காசிப்பூரில் நடைப்பெற்றது. இந்த முகாம் வேலையில்ல பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் Skill India சார்பில் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்ட முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் நடைபெற்ற சண்டையின் காரணமாக அங்கிருந்து உடனே கிளம்பி விட்டனர்.

சுமார் 30,000 வரை இளைஞர்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்க பட்ட நிலையில் கூடுதலாக 4000 இளைஞர்கள் வந்ததால் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக வந்திருந்த இளைஞர்கள் இடையே சண்டை ஏற்பட்டது. இதன்காரணமாக அவர்களுக்கு இடையே நாற்காலி, தண்ணீர் பாட்டில்களை மாறிமாறி வீசி சண்டையில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Top