You are here
Home > Uncategorized > முஃதஸிம் கத்தாஃபியுடனான காதலை வெளியிட்ட மாடல் அழகிக்கு வேலை பறிபோனது

முஃதஸிம் கத்தாஃபியுடனான காதலை வெளியிட்ட மாடல் அழகிக்கு வேலை பறிபோனது

பெர்லின்:கொலைச்செய்யப்பட்ட லிபியா முன்னாள் அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் மகன் முஃதஸிமுடன் தனக்கிருந்த காதலை வெளியிட்ட இத்தாலி-அமெரிக்க விளம்பர அழகியை ஜெர்மன் தொலைத்தொடர்பு நிறுவனம் பணியிலிருந்து நீக்கியுள்ளது.

முஃதஸிமுடன் தனக்கிருந்த காதலை வெளிப்படுத்தியதுடன் கத்தாஃபி குடும்பத்தினரை ஆதரித்து கருத்து தெரிவித்ததைத்தொடர்ந்து மாடல் அழகி வனேஸா ஹெஸ்லரின் விளம்பர ஒப்பந்தத்தை தொலைத்தொடர்பு நிறுவனம் ரத்துச்செய்தது.இத்தாலி மாத இதழான திவா டோனுக்கு அளித்த பேட்டியில் ஹெஸ்லர் தனது காதலை குறித்து தெரிவித்தார்.

மேலும் மேற்கத்திய சமூகம் சித்தரிப்பது போன்று ஒன்றுமில்லை என அவர் கூறினார்.ஹெஸ்லரிடம் இதுக்குறித்து தொலைத்தொடர்பு நிறுவனம் விளக்கம் கேட்டது.ஆனால் அவர் தனது கருத்தில் உறுதியாக இருந்தார்.இதனைத்தொடர்ந்து அவருடைய ஒப்பந்தத்தை நிறுவனம் ரத்துச்செய்தது.

Leave a Reply

Top