You are here
Home > Uncategorized > மியான்மரில் பூகம்பம்:75 பேர் மரணம்

மியான்மரில் பூகம்பம்:75 பேர் மரணம்

பாங்காக்:கிழக்கு மியான்மரில் நேற்று இரவு ஏற்பட்ட பூகம்பத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 75-ஐ தாண்டியுள்ளது. மரணித்தவர்களில் 11 பேர் பெண்களாவர்.111 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 1244 வீடுகள் சேதமடைந்துள்ளன.

தாய்லாந்து மற்றும் லாவோஸ் அருகிலுள்ள மலைப் பகுதிகளில் பூகம்பம் உருவானது. ரிக்டர் ஸ்கேலில் 6.8 அளவு பதிவாகியுள்ளது. இதனை அமெரிக்க ஜியாலஜிகல் சர்வே தெரிவித்துள்ளது.

பூகம்பத்தால் கட்டிடங்களும், ஐந்து சன்னியாசி மடங்களும் இடிந்துள்ளன. கட்டிடங்கள் தகர்ந்து விழுந்தததுதான் உயிர் சேதம் ஏற்பட காரணமாகும். மரண எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

14 சன்னியாசி மடங்களும், ஒன்பது அரசு கட்டிடங்களும் தகர்ந்து போனதாக செய்திகள் கூறுகின்றன. தாய்லாந்தில் சியாங்ராய் மாகாணத்தில் சுவர் இடிந்து ஒரு பெண் இறந்துபோனார். சாலைகள் சேதமடைந்துள்ளதால் மீட்புப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Top