You are here
Home > Uncategorized > இந்தியா > மாலேகோன் குண்டுவெடிப்பு விசாரணை NIA நீதிமன்றத்தில் தொடங்கப்படள்ளது!

மாலேகோன் குண்டுவெடிப்பு விசாரணை NIA நீதிமன்றத்தில் தொடங்கப்படள்ளது!

2008 மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக இரு சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தை அடுத்து, வரும் செவ்வாய்க்கிழமை மும்பை சிறப்பு தேசிய புலனாய்வு மைய நீதிமன்றத்தில் விசாரணை தொடரும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முதல் சாட்சி: குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட ஆறு பேரில் நான்கு பேரின் உடல் அறுவைச் சிகிச்சை செய்த ஒரு மருத்துவர் – குண்டு வெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பல காயங்கள் இருந்தன என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இரண்டாம் சாட்சி: காயமடைந்த நபரைப் பரிசோதித்திருந்த மாலேகானில் உள்ள ஒரு உள்ளூர் மருத்துவர், பரிசோதித்த அந்த நபர் குண்டு வெடிப்பு காரணமாக செவித்திறன் மற்றும் பேசுவதற்கான திறனை இழந்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவரின் ஒரு வழக்கறிஞரான சுதாகர் திவிவேதி நீதிமன்றத்தில் வராததால் சாட்சிகளின் குறுக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது மேலும் அவருக்கு 2500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதுவரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அளித்த 286 சாட்சிகளின் பட்டியலில் – மருத்துவர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் தடய நிபுணர்கள் உள்ளனர், 200 க்கும் மேற்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்திருக்கிறது.

லெப்டினன்ட் கர்னல் ஷ்க்ரிகண்ட் புரோஹித், பிரகியா சிங் தாகூர், மேஜர் ரமேஷ் உபாத்யாய், சமீர் குல்கர்னி, அஜய் ராகிர்கர், சுதாகர் த்வவேதீ மற்றும் சுதாகர் சதுர்வெடி உள்ளிட்ட ஏழு பேர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 30 ம் தேதி, பயங்கரவாத சதி, கொலை மற்றும் பிற தொடர்புடைய குற்றங்களுக்காக மேற்கூறியவர்களை நீதிமன்றம் குற்றம் சாட்டி, “பயங்கரவாதத்தை பரப்புவதற்கு பொதுவான பொருளைக் கொண்டு அபினவ் பாரத் அமைப்பு (குண்டு வெடிப்புக்கு பின்னால் இருப்பதாக கூறப்படும் ஹிந்துத்வ அமைப்பு) உருவாக்கப்பட்டது” எனவும் கூறியுள்ளது.

Leave a Reply

Top