You are here
Home > Uncategorized > இந்தியா > மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் களமிறங்கும் முஸ்லிம் பெண் வேட்பாளர்!

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் களமிறங்கும் முஸ்லிம் பெண் வேட்பாளர்!

எதிர்வரும் மாதங்களில் மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைப்பெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் பட்டியலை காங்கிரஸ் முன்னதாக வெளியிட்டது. இதனையடுத்து பாஜக சார்ர்பில் பாத்திமா ரஸூல் சித்திக் என்ற முஸ்லிம் பெண் வேட்பாளரை வடக்கு போபால் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க தனது வேட்பாளராக களமிறக்கிறது.

முன்னதாக அவரது தந்தை ரசுல் சித்திக் ஒரு மூத்த காங்கிரஸ்  கட்சி தலைவர். 1980 மற்றும் 1990களில் இரண்டு முறை மாநில அமைச்சகத்தில் பதவி வகித்தவர். இருந்தாலும் ரசூல் சித்திக்-க்கு காங்கிரஸ் உரிய மரியாதை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டோடு தான் பாத்திமா பாஜகவில் சேர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில் பாத்திமா காங்கிரஸின் அரிஃப் அக்லெலுக்கு எதிராக போட்டியிடுகிறார். காங்கிரஸின் கடந்த காலத்தில் தமக்கு எந்த விஷயத்திலும் உறுதுணையாக இருந்ததாக இல்லை என்றும் குற்றம்சாட்டுயுள்ளார்.

2013 தேர்தல்களில் பாத்திமா பாஜகவை அணுகியுள்ளார். ஆனால் அப்போது இடம் கிடைக்கவில்லை இப்போது இடம் கிடைத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக களமிறக்கிய ஒரே முஸ்லிம் வேட்பாளர் பாத்திமா மட்டும் தான்.

Leave a Reply

Top