You are here
Home > Uncategorized > ப.சிதம்பரம் குற்றவாளி அல்ல:சு.சாமியின் மனு தள்ளுபடி

ப.சிதம்பரம் குற்றவாளி அல்ல:சு.சாமியின் மனு தள்ளுபடி

புதுடெல்லி:2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் முன்னாள் நிதியமைச்சரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தை குற்றவாளியாக சேர்க்கவேண்டாம் என பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சிதம்பரத்தை குற்றவாளியாக சேர்க்கவேண்டும் என கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடிச் செய்துவிட்டு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.ஷைனி தீர்ப்பளித்தார்.

ரூ 1.76 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டு வழக்கில், பிரதான குற்றவாளிகளுள் ஒருவராக ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்றும், அதற்கான சான்றுகள் தன்னிடம் உள்ளதாகவும் கூறி சுப்பிரமணிய சாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான தீர்ப்பை பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி.

இன்று(பிப்ரவரி-4) காலையிலேயே நீதிமன்றத்துக்கு வந்துவிட்ட சுப்பிரமணிய சாமியை, பிற்பகல் 12.30க்கு வருமாறு நீதிபதி கூறியிருந்தார்.

இந்த நிலையில், பிற்பகல் 1.40 க்கு தீர்ப்பை அறிவித்தார் ஓ.பி.சைனி.

“2 ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை இணை குற்றவாளியாக சேர்க்க தேவையில்லை. இது தொடர்பாக சுப்பிரமணிய சாமி தொடர்ந்துள்ள மனுவை ரத்து செய்கிறேன்.” என்றார் நீதிபதி.

ப.சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டதும், இதுகுறித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் என நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.

விசாரணை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அணுகுவேன் என சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். சிதம்பரம் இவ்வழக்கில் குற்றவாளி என கருதவில்லை என்று நீதிமன்றத்திற்கு வெளியே அவர் கூறினார்.

நீதிமன்ற அறைக்குள் சுப்ரமணிய சுவாமி உள்பட மூன்று பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். செய்தியாளர்கள் மற்றும் இதர வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

******************* ************************ ************************

அனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

Leave a Reply

Top