You are here
Home > Uncategorized > போலி என்கவுண்டர்: பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி.க்களிடம் சி.பி.ஐ. விசாரணை!

போலி என்கவுண்டர்: பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி.க்களிடம் சி.பி.ஐ. விசாரணை!

புதுடெல்லி: குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை இகழ் நரேந்திர மோடியின் நெருங்கிய கூட்டாளியான அமித் ஷாவுக்கு எதிரான துளசிரா பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கில் பாதிக்கப்பட்டவரின் தாயாரை மிரட்டி வழக்கை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பாக பா.ஜ.க.வின் மாநிலங்களவை எம்.பி.க்களான பிரகாஷ் ஜாவேத்கர், பூபேந்திர யாதவ் ஆகியோரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது.

ஜாவேத்கர், யாதவ் இடையே நடந்த உரையாடலின் வீடியோ டேப் சி.பி.ஐ. வசம் உள்ளது. சி.பி.ஐ.யின் தலைமையகத்தில் வைத்து இருவரிடம் விசாரணை நடைபெற்றது.

வீடியோ டேப் தொடர்பாக பா.ஜ.க. பொதுச் செயலாளர் ராம் லாலையும் விசாரணைக்காக சி.பி.ஐ. அழைத்துள்ளது. ஆனால், வீடியோவில் பா.ஜ.க. தலைவர்களுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை என்று பா.ஜ.க. கூறுகிறது.

Leave a Reply

Top