You are here
Home > Uncategorized > பெல்ஜியத்திலும் இஸ்லாமிய போபியா:புர்காவுக்கு தடை

பெல்ஜியத்திலும் இஸ்லாமிய போபியா:புர்காவுக்கு தடை

ப்ரஸ்ஸல்ஸ்:முஸ்லிம் பெண்கள் தங்கள் முழு விருப்பத்துடன் முகத்தை மறைக்கும் விதமாக அணியும் நிகாப் என்ற அழைக்கப்படும் புர்காவை பொது இடங்களில் அணிவதை தடை செய்ய மேற்கத்திய நாடான பெல்ஜியம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான மசோதாவை அந்நாட்டு பாராளுமன்றம் அங்கீகரித்துள்ளது. ஐரோப்பாவில் இஸ்லாமிய போபியா பீடிக்கப்பட்ட பிரான்சை தொடர்ந்து புர்காவுக்கு தடை விதிக்கும் இரண்டாவது நாடு பெல்ஜியம் ஆகும்.

10 தினங்களில் இந்த முட்டாள் தனமான சட்டம் அமுலுக்கு வரவிருக்கிறது. அடிப்படை உரிமைகளை பேணவும், ஆண்-பெண் சமத்துவத்தை உறுதி செய்யவும்(?) இச்சட்டம் கொண்டுவரப்படுகிறதாம்-அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.

வெளிப்படையான(?) சமூகத்திற்கு முகத்தின் காட்சி தேவை எனவும், மனித நேயம் ஒருவருடைய முகத்திலிருந்து தான் வர வேண்டும் எனவும் இம்மசோதாவை ஆதரிப்பவர்கள் ரொம்பவும் புத்திசாலித்தனமாக காரணம் கூறுகின்றனர். பெல்ஜியத்தில் புர்கா அணியும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்கள் வசிக்கின்றனர்.

Leave a Reply

Top