You are here
Home > Uncategorized > பெங்களூரில் இஸ்ரேல் தூதரகம் – இஸ்ரேலிய தூதர்

பெங்களூரில் இஸ்ரேல் தூதரகம் – இஸ்ரேலிய தூதர்

புதுடெல்லி:பெங்களூரில் இஸ்ரேலின் புதிய தூதரகம் திறக்கப்படும் என அந்நாட்டின் இந்திய தூதர் அலோன்யுஷ்பிஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் சென்ற வேளையில் பெங்களூரில் இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கருத்தரங்கு ஒன்றில் உரை நிகழ்த்திய யுஷ்பிஸ் கூறியது:

உயர் தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் ஆகியவற்றிற்கு மையமாக இந்த தூதரகம் விளங்கும். இந்தியா-இஸ்ரேல் சுதந்திர வியாபார ஒப்பந்தம் இவ்வாண்டு இறுதியில் கையெழுத்தாகும். இதற்காக மார்ச் இறுதியில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் 1500 கோடி டாலர் வர்த்தகம் இரு நாடுகள் இடையே நடைபெற இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

தற்போதைய வர்த்தக மதிப்பை விட 3  மடங்கு அதிகரிக்கும் என கருதுகிறோம் என கூறினார் யுஷ்பிஸ்.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக இஸ்ரேலின் தயாரிப்புகளை வளைகுடாவுக்கு கொண்டுசேர்க்கும் வழியாக இந்தியா மாறும் என கருதப்படுகிறது.

ஃபலஸ்தீன பூமியை ஆக்கிரமித்து மத்திய கிழக்கில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடும் இஸ்ரேலுடன் இந்தியா வைத்துள்ள நட்புறவு எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை உருவாக்கும் என பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

******************* ************************ ************************

அனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

Leave a Reply

Top