You are here
Home > Uncategorized > இந்தியா > புதிதாக நியமிக்கபட்ட மூன்று ஆணைய உறுப்பினர்களும் பாஜக கட்சியை சேர்ந்தவர்களே!

புதிதாக நியமிக்கபட்ட மூன்று ஆணைய உறுப்பினர்களும் பாஜக கட்சியை சேர்ந்தவர்களே!

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய மகளிர் ஆணையத்தின் ஆணையத்தலைவர் ரேகா ஷர்மா வெளியிட்ட அறிக்கையின் படி கடந்த சில வருடங்களாக காலியாக இருந்த ஆணையத்தின் உறுப்பினர் பதவிகள் மூன்று நபர்களை கொண்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றம் குறித்தும் அவர்களின் பிரச்சனைகள் குறித்தும் விவாதித்து தீர்வளிக்கும் வழிவகையில் உருவாக்கப்பட்டது தான் தேசிய மகளிர் ஆணையம். இந்த ஆணையத்தின் தலைவராக ரேகா ஷர்மா நியமிக்கபட்டார். ஆனால் ரேகா தலைவராக நியமிக்கபட்டாலும் அவருக்கு கீழ் எந்த உறுப்பினர்களையும் அரசு நியமிக்கவில்லை.

இதனால் ஆணையம் ஒரு தனிநபரின் கீழ் சென்றதுபோல் குற்றசாட்டு எழுப்பியது. இதற்கு பிறகு தான் கடந்த வெள்ளியன்று மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை ஆணையத்தின் புதிய மூன்று உறுப்பினர்களை அறிவித்து நியமித்தது. இந்த அறிவிப்பு வெளியானதும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பொது சமூகத்தின் மத்தியிலும் கடுமையான எதிர்ப்புகள் வெளியானது.

இந்த எதிர்ப்பின் பின்னணியில் இருப்பது மத்திய அரசு நியமித்த மூன்று உறுப்பினர்களும் பல்வேறுபட்ட தரப்பில் இருந்து வந்தவர்கள் அல்ல. அனைவரும் பாஜக கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் என்பதால் தான்.

புதிதாக நியமிக்கபட்ட சந்திரமுகி தேவி மின்னால் பிகார் மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினராவார், மற்றறொரு உறுப்பினர்கலாக சோஷோ பாஜக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் கௌதம் பாஜக கட்சியின் மண்டல பொறுப்பாளர். இவர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.

குறிப்பிட்ட ஒரு தரப்பில் இருந்து மட்டும் ஆணைய உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்தது பொது களத்தில் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Top