You are here
Home > Uncategorized > பிரான்சிலிலும் ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு – பாரிஸ் குலுங்கியது!

பிரான்சிலிலும் ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு – பாரிஸ் குலுங்கியது!

பாரிஸ்: பிரான்சில் ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிசில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஒலாந்த் அரசு, சமீபத்தில் கருக்கலைப்பு தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

அத்துடன் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டத்தையும் கொண்டு வந்தது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதுடன், குடும்ப அமைப்பின் மீதுள்ள வெறுப்பால் ஜனாதிபதி இவ்வாறு செயல்பட்டு வருகிறார் என மக்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் பாரிஸ், லியோன் ஆகிய நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. போராட்டங்களில் பங்கெடுத்தோர் குடும்ப அமைப்புக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். நாம் ஒரு சமுதாயமாக வாழ்ந்து வருகிறோம், அதற்கு அஸ்திவாரமாக குடும்பம்தான் திகழ்கிறது, குடும்ப அமைப்பை தற்போது இழந்து வருகிறோம் என்று போராட்டக்காரர் ஒருவர் தெரிவித்தார்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், இந்த சட்ட ரீதியான தாக்குதல் குடும்பங்களுக்கு எதிரானது, குழந்தைகளுக்கு எதிரானது, நாட்டுக்கே எதிரானது என்று கோஷமிட்டனர்.

Leave a Reply

Top