You are here
Home > Uncategorized > இந்தியா > பிரதமரின் பாராமுகத்தின் விளைவு இன்று நாட்டை உலுக்கிவருகிறது விவசாயிகளின் போராட்டம் – கனிமொழி சாடல்!

பிரதமரின் பாராமுகத்தின் விளைவு இன்று நாட்டை உலுக்கிவருகிறது விவசாயிகளின் போராட்டம் – கனிமொழி சாடல்!

வேளாண் கடன் தள்ளுபடி, விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து இந்திய விவசாயிகள் ஒத்துழைப்பு குழுத்தலைமையில் குஜராத், ஆந்திரப் பிரதேசம், தமிழகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் வியாழக்கிழமை டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த வியாழன் அன்று கூடினார்கள். இந்நிலையில் நேற்று 5லட்சம் விவசாயிகள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர்.

இந்நிலையில் “தமிழக விவசாயிகள் டெல்லி வீதியில் நிர்வாண போராட்டம் நடத்திய போதே பிரதமர் ஓடி வந்து ஆறுதல் என்னும் ஒற்றைத்துணி கொண்டு மூடி மறைக்காததன் விளைவு இன்று இந்திய அளவில் 5 லட்சம் விவசாயிகள் நிர்வாண ஊர்வலத்தில் வந்து நிற்கின்றது என்றும் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்காத அரசு தேசப்பற்று பற்றி பேசுகிறது என்றும் மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் இருந்து தேசிய தென்னிந்திய நிதிகள் ஒருங்கிணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் ஆயிரயத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியில் பங்கேற்றனர்.

Leave a Reply

Top