You are here
Home > Uncategorized > பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது தேசப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது!

பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது தேசப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது!

முஸஃபர்நகர்: வகுப்பு கலவரத்தை தூண்டியதாக கைதான பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத் சோம் மீது தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வாரண்டை உராய் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சோமுவிடம் அளித்துள்ளதாக மாவட்ட மாஜிஸ்ட்ரேட் கவுசல் ராஜ் சர்மா தெரிவித்துள்ளார்.தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் ஒருவரை மூன்று மாதங்கள் வரை சிறையில் அடைக்கலாம்.சாதாரண வழக்கு போல 24 மணிநேரத்திற்குள் நீதிமன்றத்தில் அவரை ஆஜராக்கவேண்டிய அவசியம் இல்லை.தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் படி அதிகபட்சமாக ஒரு ஆண்டு வரை சிறையில் அடைக்கலாம்.வகுப்புவாத கலவரம் பரவக்காரணமான போலி வீடியோவை பரப்புரைச் செய்தது, உணர்ச்சியை தூண்டும் வகையில் உரை நிகழ்த்தியது ஆகியன சங்கீத் சோம் மீதான வழக்குகளாகும்.முஸஃபர் நகர் கலவரம் தொடர்பாக பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேஷ் ராணா ஏற்கனவே கைதுச் செய்யப்பட்டுள்ளார்.மொத்தம் 16 அரசியல்வாதிகள் மீது நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்திருந்தது.அதேவேளையில் கலவரம் தொடர்பாக கைதான பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ நூர் ஸலீம், பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேஷ் ராணா ஆகியோருக்கு நீதிமன்றம் ஜாமீன் அனுமதித்துள்ளது.

Leave a Reply

Top