You are here
Home > Uncategorized > பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிரான அவதூறு செய்தி: ஊடகங்கள் மன்னிப்புக்கோர கேரள மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை!

பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிரான அவதூறு செய்தி: ஊடகங்கள் மன்னிப்புக்கோர கேரள மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை!

கோழிக்கோடு:அஸ்ஸாம் மாநில மக்களுக்கு எதிராக வதந்தி செய்திகளை பரப்பியது ஹிந்துத்துவா இணையதளங்கள் தாம் என்ற செய்தி வெளிவந்துள்ள சூழலில், பாப்புலர் ஃப்ர்ண்ட் மீது அவதூறுச் செய்தியை பரப்புரைச் செய்த ஊடகங்கள் தங்களது தவறுக்காக மன்னிப்புக் கோரவேண்டும் என்று கேரள மாநில பாப்புலர் ஃப்ர்ண்டின் பொதுச் செயலாளர் பி.அப்துல் ஹமீத் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் மேலும் கூறியது:

இந்தியாவில் அரசுக்கு கீழ் இல்லாத சைபர் செக்யூரிட்டி ஏஜன்சி என்ற பெயரில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. சைபர் தாக்குதல்களைக் குறித்தும், இதர சைபர் குற்றங்களை குறித்தும் மத்திய அரசுக்கு அறிக்கையை அளிக்கும் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்ஃபான்ஸ் டீமின் கீழ் இந்த பெயரில் எவ்வித ஏஜன்சியும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மிரட்டல் செய்திகளை பரப்பியதற்காக அரசு தடைச்செய்த இணையதளங்களில் 5-இல் 1 ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்களுக்கு சொந்தமானவையாகும். வதந்தி செய்திகளின் உறைவிடத்தைக் குறித்தும், சதித் திட்டத்தை குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தவேண்டும் என்று பி.அப்துல் ஹமீத் தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Top