You are here
Home > Uncategorized > பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர்: காங். எம்.எல்.ஏ.வின் கோரிக்கைக்கு முஸ்லிம் தலைவர்கள் ஆதரவு!

பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர்: காங். எம்.எல்.ஏ.வின் கோரிக்கைக்கு முஸ்லிம் தலைவர்கள் ஆதரவு!

புதுடெல்லி: பாட்லா ஹவுஸில் நடந்த போலி என்கவுண்டர் வழக்கில் மீண்டும் விசாரணை தேவை என்று கூறியுள்ள காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஆஸிஃப் முஹம்மது கானின் கோரிக்கைக்கு முஸ்லிம் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கோரிக்கை எழுப்பிய முறை சரியில்லை என்றாலும், விசாரணை தேவை என்ற கருத்தை அனைவரும்ஆதரித்தனர்.ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி மாநில அரசு ஒரு மாதத்தைபூர்த்திச் செய்துள்ளது தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்புவிடுத்த செய்தியாளர் கூட்டத்தில் சிறப்பு புலனாய்வு குழுவின் மூலம்பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றகோரிக்கை முன்வைக்கப்பட்டது.ஆனால், பாட்லா ஹவுஸ் வழக்கு தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு வெளியாகிவிட்டதுஎன்றும், மறு விசாரணை சாத்தியமில்லை என்றும் ஆம் ஆத்மி கட்சிகூறியது.இதனைத்தொடர்ந்து முழக்கமிட்டவாறு பத்திரிகையாளர்களிடையே நுழைந்தகாங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ஆஸிஃப் முஹம்மது கான், ஆம் ஆத்மி கட்சிதேர்தல் அறிக்கையில் கூறியதில் இருந்து பின்வாங்குவதாக குற்றம்சாட்டினார்.இவ்விவகாரத்தில் அனுகூலமான நிலைப்பாட்டை எடுக்காவிட்டால் தான் ஆம் ஆத்மிகட்சி தலைமையிலான அரசை ஆதரிக்கமாட்டேன் என்றும், இதற்காக கட்சி தன்னைநீக்கினாலும் பரவாயில்லை என்றும் கான் தெரிவித்தார்ஆனால், தேர்தல்அறிக்கையில் இவ்வாறு வாக்குறுதி அளிக்கவில்லை என்று ஆம் ஆத்மி கட்சிகூறுகிறது.தேர்தல் பிரச்சாரத்தின்போது பாட்லா ஹவுஸ் என்கவுண்டர்போலியானது.ஆட்சிக்கு வந்தால் மறு விசாரணை நடத்துவோம் என்ற ஆம் ஆத்மிகட்சியின் நோட்டீஸ், கெஜ்ரிவாலின் கையெழுத்துடன் முஸ்லிம்கள் வாழும்பகுதிகளில் விநியோகிக்கப்பட்டது.84 ஆம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர்களுக்குஎதிரான கலவரத்தைக் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழுநியமிக்கவேண்டும் என்ற கோரிக்கையை கெஜ்ரிவால் எழுப்பியிருந்தார்.ஆகவே,பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் வழக்கிலும் விசாரணை நடத்தவேண்டும் என்றகோரிக்கை செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பப்பட்டது.பழைய சம்பவங்களை விசாரிப்பதில் பாட்லா ஹவுஸ் சம்பவத்தையும் விசாரிப்பதில்தவறில்லை.ஆனால், அதன்பெயரில் ஆம் ஆத்மி கட்சி அரசுக்கு அளித்து வரும்ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசிக்கவில்லை என்று மூத்த காங்கிரஸ்கட்சி தலைவர் மதீன் அஹ்மத் தெரிவித்துள்ளார்.இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏமாதியா மஹல் கூறுகையில்,’விசாரணை தேவையில்லை என்ற கெஜ்ரிவாலின் கருத்தில்உடன்பாடில்லை.மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ்அரசுகள் இவ்விவகாரத்தில் சுதந்திர விசாரணை கோரிக்கைகளைநிராகரித்தன.இச்சூழலில் ஆஸிஃப் முஹம்மது கானின் தற்போதைய நிலைப்பாடுகபடமாகும்.ஆனால், பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் சம்பவம் குறித்து நீதிவிசாரணை தேவை’ என்று தெரிவித்தார்.நீதி விசாரணை தேவை என்று ஜாமிஆ ஆசிரியர் ஒருமைப்பாட்டு அமைப்பின் தலைவர்மனீஷா சேத்தியும் கோரிக்கை விடுத்துள்ளார்.இச்சம்பவம் குறித்துஉச்சநீதிமன்ற நீதிபதியின் மூலம் நீதி விசாரணை நடத்தவேண்டும் என்றுதுவக்கம் முதலே தாங்கள் கோரி வருவதாக மனீஷா சேதி தெரிவித்தார்.டெல்லிஜும்ஆ மஸ்ஜித் ஷாஹி இமாம் ஸய்யித் அஹ்மத் புகாரியும் நீதிவிசாரணை தேவைஎன்ற கோரிக்கையை ஆதரித்துள்ளார்.

 

Leave a Reply

Top