You are here
Home > Uncategorized > இந்தியா > பாஜக வெற்றிக்காக செயல்பட்ட சிபிஎம் கட்சி – முன்னாள் சிபிஎம் கட்சி எம்.பி . குற்றசாட்டு!

பாஜக வெற்றிக்காக செயல்பட்ட சிபிஎம் கட்சி – முன்னாள் சிபிஎம் கட்சி எம்.பி . குற்றசாட்டு!



கேரளா மாநில சிபிஎம் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி. அப்துல்லா குட்டி நாட்டில் உள்ள மதச்சார்பற்ற வாக்குகளை பிளவுப்படுத்த பாஜக கட்சியிலிருந்து சிபிஎம் கட்சியின் பிரகாஷ் காரத் 100 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக கூறி சர்ச்சையை எழுப்பியுள்ளார்.  ராஜஸ்தானில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களிலும் இந்த சதி நடைப்பெற்றுள்ளதாக அப்துல்லா குட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட செய்தியாவது: “குட்டி தனது டெல்லி தோழர்களிடமிருந்து பெற்ற தகவலின்படி சிபிஎம் கட்சி ராஜஸ்தானில் பா.ஜ.க வேட்பாளர்களை வெற்றிப்பெற வாக்குகளை பிளவுபடுத்தி காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகள்  சென்றுவிடாமல் பாஜக கட்சிக்கு நேர்மறையாக செல்ல சிபிஎம் சதி செய்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ராஜஸ்தானில் மொத்தமாக 28 வேட்பாளர்கள் சிபிஎம் சார்பாக போட்டியிட்டனர். இந்த தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் சிபிஎம் கிட்டத்தட்ட 4 லட்சம் மதச்சார்பற்ற வாக்குகளை பிரித்து பாஜக வேட்பாளர்களுக்கு மூன்று தொகுதிகளில் வெற்றிபெற உதவியுள்ளது. சிபிஎம் பிபிபங்கா தொகுதியில் பாஜகவின் தர்மேந்திர குமார் 278 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். இங்கு சிபிஎம் வேட்பாளர் பெற்ற வாக்குகள் 2659.

பெரும்பாலான இடங்களில் சிபிஎம் தங்களது சொந்த வைப்புகளை (Deposit) இழந்துள்ளது. இந்த தேர்லில் சிபிஎம் கட்சி ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்கும் ஒரு அற்புதமான விளையாட்டாக விளையாடியுள்ளது என்று குட்டி குற்றம்சாட்டியுள்ளார்

குற்றம்சாட்டியுள்ள குட்டி அவர்கள் 1999-2009 முதல் நாடாளுமன்ற தேர்தலில் சிபிஎம் மூலம் களம்கண்டு வெற்றிபெற்றவர். பின்பு உட்கட்சி பூசலால் கட்சியில் இருந்து 2009 ல் சிபிஎம் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  பின்பு காங்கிரஸில் சேர்ந்தார். காங்கிரஸ் சட்டமன்றத்தில் கண்ணூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து வேட்பாளர் வெற்றி பெற்றார். 2011 சட்டமன்றத் தேர்தல்களில் கண்ணூர் தொகுதியில் இருந்து வெற்றிபெற்ற அவர் சிபிஎம் வேட்பாளரை தோற்கடித்தார்.



Leave a Reply

Top