You are here
Home > Uncategorized > இந்தியா > பாஜகவினரின் பாலியல் தொல்லையினால் பதவி விலகிய பாஜக பெண் தலைவர்!

பாஜகவினரின் பாலியல் தொல்லையினால் பதவி விலகிய பாஜக பெண் தலைவர்!

பாரதீய ஜனதா கட்சியின் மகளீர் பிரிவான மகிளா மோர்ச்சா அமைப்பின் நகரசபை தலைவரான மஞ்சு குப்தா (பெயர் மற்றம்) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது பாஜக கட்சி பெண்களுக்கு மரியாதை பற்றி நீண்ட காலமாக பேசுகிறது. ஆனால் தான் சந்தித்த தொந்தரவு சொல்லமுடியாத அளவில் இருக்கிறது என்றார்.

பாஜக கட்சியின் மகளிர் பிரிவில் வெவ்வேறு பிரிவில் அங்கம் வகித்த குப்தா மாநில அளவில் மிகவும் முக்கிய புள்ளியாவார். தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து குப்தா பாஜக மாநிலத் தலைவருக்கும், பாஜக மகிளா மோர்ச்சா மாநிலத் தலைவருக்கும் கடிதம் எழுதி அனுப்பிருக்கிறார்.

அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில்  “பா.ஜ.க.வின்  சித்தாந்தத்திற்கு நான் முழுமையாக கட்டுபட்டு கடமையாற்றி வந்தேன். ஆனால் கீழ்மட்டத்தில் இருந்து கட்சியின் உயரிய பதவியை நான் அடைந்தது சிலருக்கு பிடிக்கவில்லை. அதன் காரணமாக பல்வேறுபட்ட நிலையில் நான் பாலியல் ரீதியான தொல்லைகளை சந்தித்து வந்தேன். இதனால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக என்னால் தொடர்ந்து பதவியில் இருந்து பயணிக்க முடியாததால் பதவியில் இருந்து விலகிக்கொள்கிறேன். எனவே எனது பதவியை இராஜினாமா செய்கிறேன். ஆனால் தொடர்ந்து கட்சியில் ஊழியராக செயல்படுவேன் என்று அந்த கடிதத்தில் குறிபிட்டிருந்தார்.

2017 ஆம் ஆண்டில் பா.ஜ.க. மகன் மகள் சமம் என்ற பிரச்சாரத்திற்காக மாநில இணை அமைப்பாளராக குப்தா நியமிக்கப்பட்டிருந்தார் என்பது கூடுதல் தகவல்.

Leave a Reply

Top