You are here
Home > Uncategorized > பாகிஸ்தான்:தாக்குதலால் இரத்தக் களரியான கைபர்!

பாகிஸ்தான்:தாக்குதலால் இரத்தக் களரியான கைபர்!

இஸ்லாமாபாத்:கைபர் மாகாணத்தில் மஸ்ஜிதுக்கு அருகே நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர். 20 பேருக்கு காயமேற்பட்டது. மஸ்ஜிதில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றிவிட்டு மக்கள் திரும்பி வரும் வேளையில் இத்தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

உடலில் குண்டை கட்டிக்கொண்டு வந்த நபர் சுயமாக வெடித்து சிதறினார் என்று செய்தி கூறுகிறது. குண்டுவெடிப்பில் மஸ்ஜிதுக்கு அருகே உள்ள கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. தாரிக் அப்ரீதி தலைமை வகிக்கும் ஒரு குழு இத்தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.

அதேவேளையில் ஆப்கானிஸ்தானிற்கு நேட்டோ படையினருக்கு சரக்குகளை கொண்டு செல்லும் வழியான கைபர் ஏஜன்சியில் நடந்த கடுமையான மோதலில் 33 பேர் கொல்லப்பட்டனர். ராணுவமும், லஷ்கர்  இஸ்லாம் என்று அழைக்கப்படும் பிரிவினரும் மோதிக் கொண்டனர். கொல்லப்பட்டவர்களில் 10 பேர் ராணுவத்தினர் ஆவர். மூன்று ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மலைத்தொடரில் ராணுவம் நிறுவியுள்ள மூன்று செக்போஸ்டுகள் மீது போராளிகள் தாக்குதலை நடத்தினர். யுத்த பிரபுவான மங்கல்பேக் தலைமை வகிக்கும் அமைப்புதான் லஷ்கர் இஸ்லாம் ஆகும். அதேவேளையில் இச்சம்பவத்தின் உண்மையான நிலவரம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

அதேவேளையில் பெஷாவரில் மர்ம நபர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் இண்டலிஜன்ஸ் ஆஃபீஸர் பலியானார். பஷீர் கான் என்று அழைக்கப்படும் இண்டலிஜன்ஸ் அதிகாரி பைக்கில் செல்லும் வேளையில் இன்னொரு பைக்கில் வந்த துப்பாக்கி ஏந்திய மர்மநபர் அவரை சுட்டுக் கொலைச் செய்தார். இத்தாக்குதலுக்கான பொறுப்பை பாக். தாலிபான் ஏற்றுக்கொண்டுள்ளது.

******************* ************************ ************************

அனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

Leave a Reply

Top