You are here
Home > Uncategorized > பாகிஸ்தானில் மீண்டும் அமெரிக்க ஆளில்லா விமானத்தாக்குதல்-4 பேர் மரணம்

பாகிஸ்தானில் மீண்டும் அமெரிக்க ஆளில்லா விமானத்தாக்குதல்-4 பேர் மரணம்

மிரான்ஷா:வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள வஸீரிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

பாக்.-ஆப்கான் எல்லைப்பகுதியான வடமேற்கு பாகிஸ்தானில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகள் இரு நாடுகளில் கட்டுப்பாட்டில் இல்லை எனவும், இது உலகிலேயே மிகவும் அபாயமான பகுதி என அமெரிக்கா கூறுகிறது. அல்காயிதா, தாலிபான் போராளிகளின் முக்கிய உறைவிடமாக இப்பகுதி திகழ்வதாக கூறி அமெரிக்கா தொடர்ந்து இப்பகுதியில் வாழும் அப்பாவி மக்களை அநியாயமாக கொலை செய்துவருகிறது.

சாலை அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது ஆளில்லாவிமானம் தாக்குதல் நடத்தியது. காரில் அமர்ந்திருந்த நான்கு பேரும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் யார்? என்பது குறித்து பாகிஸ்தானோ, அமெரிக்காவோ தெரிவிக்கவில்லை. உஸாமா பின்லேடனை அபட்டோபாத்தில் கொலை செய்ததாக கூறும் அமெரிக்கா, அதன் பிறகு பாகிஸ்தானில் நடத்தும் 14-வது அடாவடித்தாக்குதலாகும் இது. பின்லேடனின் மரணம் அல்காயிதாவின் சிதறலுக்கு ஒரு எல்லை வரை காரணமானதாக அமெரிக்கா கூறுகிறது.

இதற்கிடையே, உஸாமாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்துசென்ற பாக்.ராணுவ அதிகாரியை அமெரிக்கா சிறையில் அடைத்துள்ளதாக வெளியான செய்தியை பாகிஸ்தான் மறுத்துள்ளது. பாகிஸ்தானில் அதிகாரத்தில் இருக்கும் எவரும் உஸாமா பாகிஸ்தானில் தங்கியிருந்ததை அறிந்திருக்கவில்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் நடந்த இனக்கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு சம்பவங்களில் முத்தஹிதா குவாமி இயக்கமும், அவாமி தேசிய கட்சியும் மோதிக்கொண்டன. வன்முறை பல இடங்களுக்கும் பரவுவதாக தகவல். ஊழலும், மாஃபியா கும்பலும் வேர் ஊன்றிய கராச்சியில் மோதல்களும், மரணங்களும் அன்றாட சம்பவங்களாக மாறிவிட்டன.

Leave a Reply

Top