பஹ்ரைன்:ராணுவம் மீண்டும் எதிர்ப்பாளர்களை தாக்கியது
4 Jun 2011
மனாமா:ராணுவ சட்டத்தை வாபஸ் பெற்றதை தொடர்ந்து திரண்ட எதிர்ப்பாளர்களை பஹ்ரைன் நாட்டு ராணுவம் மீண்டும் தாக்கியது. மனாமாவின் அருகிலுள்ள கிராமங்களில் எதிர்ப்பாளர்களின் கூட்டத்தை கலைக்க ராணுவம் கண்ணீர் குண்டு உள்ளிட்டவை பயன்படுத்தியது.
திரஸ், பானிஜம்ரா, கர்ஸகான் ஆகிய இடங்களில் கடுமையான தாக்குதல்கள் நடந்ததாக நேரடியாக பார்த்தவர்களை மேற்கோள்காட்டி அல்ஜசீரா தெரிவிக்கிறது. பானி ஜம்ராவில் ஒரு வீட்டிற்கு முன்பு கூடிய 30 பெண்களை ராணுவம் விரட்டியடித்தது.
நகரங்களில் இருந்து ராணுவம் வாபஸ் பெற்ற போதிலும் கூடுதல் ராணுவத்தினர் சில கிராமங்களில் முகாமிட்டுள்ளனர். தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை நடத்துவோம் என தொடர்புடையவர்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர்ப்பாளர்கள் பேரணி நடத்த அனுமதிக்கவேண்டும் எனவும், ஆயுதம் உபயோகித்து அவர்களை எதிர்கொள்ள கூடாது எனவும் சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் கோரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளையில் மனித உரிமை ஆர்வலரான ஸைனப் அல் கவஜாவை போலீஸ் அழைத்துள்ளது என பஹ்ரைன் செண்டர் ஃபார் ஹியூமன் ரைட்ஸ் அறிவித்துள்ளது.உறவினர்களை கைது செய்தததை கண்டித்து கடந்த ஏப்ரல் மாதம் உண்ணாவிரத போராட்டம் நடத்திய நபர்தாம் எதிர்கட்சி தலைவர் அப்துல்ஹாதி அல் கவஜின் மகள் ஸைனப்.



komşu çiftlik hileleri…
komşu çiftlik…
Atari Mario…
Atari…
sesli chat…
sesli sohbet…
yerli dizi izle…
dizi izle…