You are here
Home > Uncategorized > நீரா ராடியாவின் புத்தகத்திற்கு தடை

நீரா ராடியாவின் புத்தகத்திற்கு தடை

புதுடெல்லி:2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்புடைய  இடைத்தரகர் நீரா ராடியாவைக் குறித்து வெளியான புத்தகத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பிரபல வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த் எழுதிய “க்ளோஸ் என்கவுண்டர்ஸ் வித் நீரா ராடியா” என்ற புத்தகத்தை விற்பனை செய்வதையும், வெளியிடுவதையும் நீதிமன்றம் தடை செய்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருவதால் புத்தகத்தை இவ்வேளையில் வெளியிடக் கூடாது என நீதிமன்றம் விளக்கம் அளித்தது. ஜூலையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.

தவறான தகவல்கள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாகவும், இது தனது அந்தரங்க வாழ்வின் மீதான ஆக்கிரமிப்பு என சுட்டிக்காட்டி நீரா ராடியா அளித்த புகார் மனுவின் மீதான விசாரணையில் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனந்த் நீரா ராடியாவின் அண்டை வீட்டை சார்ந்தவர். மேலும் அவரது முன்னாள் நண்பராவார்.

Leave a Reply

Top