You are here
Home > Uncategorized > நீண்டகால போராட்டத்திற்கு தயாராகும் இஃக்வானுல் முஸ்லிமீன்!

நீண்டகால போராட்டத்திற்கு தயாராகும் இஃக்வானுல் முஸ்லிமீன்!

கெய்ரோ: சர்வாதிகார ராணுவ அரசு அடக்குமுறைகளை வலுப்படுத்தியதை தொடர்ந்து இஃக்வானுல் முஸ்லிமீன் இயக்கம் தங்களது நடவடிக்கைகளை பன்முகப்படுத்தி வருவதோடு மேலும் பல பிரமுக தலைவர்களும் தலைமறைவாகியுள்ளதாக நியூயார்க்டைம்ஸ் கூறுகிறது.

ஜமால் அப்துல் நாஸரின் காலம் தொட்டே ஆட்சியாளர்களின் கொடூரமான தாக்குதலுக்கும், சித்திரவதைகளுக்கும் ஆளான இஃக்வானுல் முஸ்லிமீனின் ரகசிய செயல்பாடுகள் வெளியே தெரியாது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். நீண்ட கால எதிர்ப்பு போராட்டத்திற்கு உறுப்பினர்களை தயார் செய்ய தலைமை முயற்சிக்கிறது.

வலுவான அடக்குமுறைகள் நடந்த பிறகும் இப்போதும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடத்தான் செய்கின்றனர். அதனை தடுக்க ராணுவ அரசால் இயலவில்லை. டாக்டர் முஹம்மது முர்ஸி ராணுவ சதிப் புரட்சியால் ஆட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு ஆகஸ்ட் 14-ஆம் தேதி ராணுவம் ராபியா அல் அதபியா மஸ்ஜிதில் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் இஃக்வானுல் முஸ்லிமீனுக்கு மிகப் பெரிய சவாலாக மாறியது.

ஆனால், இரண்டு வாரங்களுக்குள் புனரமைத்து பணிகளை தீவிரப்படுத்த இஃக்வானால் முடிந்தது. தற்போது மிகவும் கவனமாகவே இயக்க நிகழ்ச்சிகளை குறித்து விவாதிக்க கூட்டங்களை நடத்துகிறது இஃக்வான். டாக்டர் முர்ஸிக்கு எதிராக களமிறங்கிய மதச்சார்பற்ற சக்திகளையும் ராணுவ சர்வாதிகார அரசு அடக்கி ஒடுக்குவது ஜனநாயக ரீதியான போராட்டம் வலுப் பெற காரணமாகும் என்று இஃக்வானுல் முஸ்லிமீன் கருதுகிறது.

ஸலஃபிகளின் அந்நூர் கட்சியில் அரசியல் சாசனம் தொடர்பாக வளர்ந்து வரும் கருத்துவேறுபாடையும் நல்ல செய்தியாக இஃக்வான் கருதுகிறது.

Leave a Reply

Top