You are here
Home > Uncategorized > நிகமானந்தாவின் உள் உறுப்புக்களில் தடவியல் பரிசோதனை

நிகமானந்தாவின் உள் உறுப்புக்களில் தடவியல் பரிசோதனை

புதுடெல்லி:கங்கை நதியில் மணல் அள்ள தோண்டுவதற்கு எதிராக உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வந்தபொழுது மரணித்த நிகமானந்தாவின் உடலின் உள் உறுப்புக்கள் தடவியல் பரிசோதனைக்காக டெல்லி சோதனைக்கூடத்திற்கு அனுப்பப்பட உள்ளது.

விஷம் உள்ளே சென்றதால் நிகமானந்தா மரணித்தார் என குற்றச்சாட்டு எழுந்ததையொட்டி இப்பரிசோதனை நடத்தப்படுகிறது.தடவியல் பரிசோதனை நடத்தப்படவேண்டும் என நிகமானந்தா உறுப்பினராக இருந்த ஆசிரமம் இக்கோரிக்கையை முன்வைத்ததாக ஹரித்துவார் சீனியர் போலீஸ் சூப்பிரண்ட் கேவல் குரானா இதனை தெரிவித்துள்ளார்.

நிகமானந்தாவிற்கு சிகிட்சை அளிக்கும் வேளையில் மணல் மாஃபியாவின் விருப்பத்தின் படி விஷம் கொடுத்து அவரை கொலைச்செய்ததாக கூறிய ஆசிரமத்தின் குருவான சிவானந்த் இதனைக்குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Top