You are here
Home > Uncategorized > இந்தியா > நாட்டிலுள்ள அனைத்து ஹனுமான் கோயிலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்!

நாட்டிலுள்ள அனைத்து ஹனுமான் கோயிலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்!

ராஜஸ்தானிலுள்ள ஆல்வாரில் கடந்த வாரம் நடந்த தேர்தல் கூட்டத்தின்போது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்து கடவுளாகிய ஹனுமானை தலித் என்று கூறிய பிறகு ஆக்ராவில் உள்ள தலித்துகள் இந்தியா முழுவதும் உள்ள ஹனுமான் கோவிளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமையன்று டெல்லி கான்பூர் நெடுஞ்சாலை வழியாக 30க்கும் அதிகமான தலித்துக்கள் பூணுல் அணிந்துகொண்டு ஹனுமான் கீதை பாடியபடியும் ‘தலித் கா தேவ்தா ஹனுமணக்கு ஜெய்’ என்ற முழங்கிய படியும் ‘லாங்கிரி கி சவுக்கி’ (Langre ki Chowki) என்ற இடத்தில் உள்ள ஹனுமான் கோவிலை சென்றடைந்தனர்.

தாங்கள் ஹனுமானை தலித்தின் கடவுள் என்று அறியாமல் இருந்தோம். கடந்த வாரம் எங்கள் முதலமைச்சர் சொல்லி தான் தெரியும். இப்போது அணைத்து ஹனுமான் கோவில்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஜாதியை சார்ந்து கடவுளை வணங்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியவில்லை. முதலமைச்சர் உறுதியாக இருந்தால் எங்கள் சமூகத்துக்கு அனைத்து கோவிளை முன்வந்து கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். இதனால் பாஜகவிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் மாநில கமிட்டி யோகிக்கு எதிராக புகார் ஒன்றை அளித்துள்ளது. அதில் கடவுள் சாதிகளுக்கு மேலானவர், அனைத்து சாதியினரும் கடவுள்களாக உள்ளனர் . ஒரு குறிப்பிட்ட சாதியைப் சமந்தப்படுத்துவது ஏற்புடையதில்லை என்று அதில் குறிபிட்டிருந்தார்.

Leave a Reply

Top